Showing posts with label இனியவன். Show all posts

Thursday, June 17, 2010

இறைவனின் பெயரால்..
நம்ம நாடு(அதாங்க இந்தியா)வளர்ந்த நாடா மாறியதற்கு அப்புறம் (எப்ப மாறுச்சு?) எல்லாருக்கும் கையில 5 விரல் இருக்குதோ இல்லையோ ஒரு செல்போன் இருக்கு. அதே மாதிரி அடுத்த கட்ட வளர்ச்சியா நம்ம நாட்டு விஞ்ஞானிகள் கணிக்கிறது எல்லாருக்கும் ஒரு வலைப்பூ(blog) இருக்கும் என்ற செய்திதான்.ஏன் நாமளும் நம்ம நாட்டோட வளர்ச்சில பங்கெடுத்துக்க கூடாதுன்னு குப்புற படுத்து யோசிச்சதன் விளைவு தான் இந்த வலைப்பூ.

சரி,வலைப்பூ தொடங்கியாச்சு ஏதாவது எழுதனுமே னு யோசிக்கும் போதுதான் தலையே வெடிச்சுடும் போலிருக்கு.என்ன பண்றது இவ்ளோ நாள் சும்மா இருந்தே பழக்கப்பட்ட மூளைய திடீர்னு வேலை பார்க்க சொன்னா அது என்ன பண்ணும் பாவம். சரி,கழுதை ஆரம்பிச்சுட்டோம் என்னத்தையாவது எழுதி தொலைவோம், மூளை இல்லன்னா என்ன அதான் மனசு இருக்கே மனசுக்கு எது சரின்னு படுதோ அதை எழுதுவோம்,என்ன சொல்றீங்க?

முதல் இரண்டு வார்த்தைய எழுதி முடிச்சவுடனே ஒரு சின்ன பயம். ஏன்னா எனக்கு தெரிஞ்ச முக்கியமான பதிவர்கள் எல்லாமே நாத்திகம் பேசுறவங்க,எங்க நம்ம எழுத்தை பார்த்துட்டு இவன் ஒரு கடவுள் நம்பிக்கை உள்ள முட்டாள்,இல்ல பார்ப்பனீயவாதி அப்படி இப்படி னு ஏதாவது சொல்லி பின்னுட்டததுல வந்து கும்மிட்டா என்ன பண்றது?(இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ளே பின்னுட்டமா?) ஆனா நாம தான் மனசு பேச்சை கேக்குரவனாச்சே அதான் எது நடந்தாலும் பரவாயில்ல னு எழுதிட்டேன்.

இனிமே என்ன நடந்தாலும் பரவாயில்லிங்க,மனசுக்கு எது சரின்னு படுதோ அதை தைரியமா எழுத போறேன்(எல்லாம் உங்க மேல உள்ள நம்பிக்கை தான்). தொடர்ந்து உங்கள் ஆதரவை நாடும் உங்கள் நண்பன் இனியவன்.

(குறிப்பு : இந்த பதிவிற்கு முதல் பின்னுட்டம் இடுவதின் முலமாக வரலாற்றில் இடம் பெற போகும் அந்த நபர் யாரென்று அறிய உங்களை போன்றே நானும் மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறேன்,அது நீங்களாகவும் இருக்கலாம்.)