Friday, June 18, 2010

எமனின் அழைப்பு!

வாகனம் ஓட்டிக்கொண்டே செல்போன் பேசுகிறவர்களுக்கு தெரியுமா அவர்கள் பேசிக்கொண்டிருப்பது எமனிடம் என்று?
அப்படி என்ன தான் பேசுவாங்களோ,தெரியலிங்க..அதுல அவங்களுக்கு ஒரு சந்தோசம்.அட நாயே! நீ மட்டும் செத்தா பரவாயில்லடா உன்னால ரோட்டுல போற மத்தவங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா,யாரு பொறுப்பு? இந்த சாராயம் குடிச்சுட்டு வண்டி ஒட்டுரவங்கள விட செல்போன்ல சினுங்கிகிட்டே போரவங்கனாலதான் ஆபத்து அதிகம்.இப்ப இருக்கிற நிலைமை ரொம்ப மோசம்,சின்ன சின்ன பசங்களுக்கெல்லாம் கார்,பைக் னு வாங்கி தராங்க அவங்க பெற்றோர்,இதுல செல்போன் இல்லாத ஆளே இந்தியா ல இல்லேன்னு சொல்லலாம்,முக்கியமா இளைஞ்சர்கள் தான் அதிகமா செல்போன் பேசிட்டே டிரைவ் பண்றது.
பாவம் காவல் துறையும் எவ்ளோ தான் காசு வாங்குறது,அதனால அவங்களும் சில கேஸ்கள கண்டுக்காம விடுறாங்க.அதுலயும் சில பேரு ரொம்ப புத்திசாலித்தனமா ஹெல்மேட்டுக்குள்ள செல்போன் சொருகி யாருக்குமே தெரியாத மாதிரி பேசிட்டே போறாங்க.
எனக்கு தெரிஞ்ச நண்பர் ஒருவர் பைக்ல போயிட்டிருக்கும் பொது அவரோட நண்பர் பின்னாடி உக்காந்து செல்லுல பேசிட்டே வந்துருக்காரு,இவரும் ரொம்ப கவனமா தான் வண்டிய டிரைவ் பண்ணியிருக்கிறார்,என்ன பிரச்சினைனா பின்னாடி வந்த ஒரு கார் கட்டுப்பாட்ட இழந்து தாறுமாறா வந்துருக்கு,இத கண்ணாடில பார்த்த இவர் வேற வழியில்லாம  வண்டில இருந்து குதித்து இறங்கி விட்டார்,ஆனால் அது கூட தெரியாம பின்னாடி இருந்தவர் தனது செல்போன் பேச்சிலே கண்ணும் கருத்துமாக இருந்திருக்கிறார்,பாவம் பின்னல் வந்த கார் மோதி அதே இடத்திலே ஆள் அவுட்.
கார்ல ஒரு இடத்திலே ஏறி இன்னொரு இடத்துல இறங்குறதுக்கு முன்னாடி செல்போன் லையே பிசினெஸ் பேசி முடிக்கிறவங்க்களும் இருக்கிறார்கள்,அவங்க பிசினெஸ் அந்த செல்போன் பேச்சாலே முடிஞ்சிட்டா  என்ன பண்ணறது சொல்லுங்க,இவ்ளோ நாள் பிசினெஸ் பண்ணி சம்பாதித்த சொத்து எல்லாம் யாரோ அனுபவிப்பாங்க.
இவ்ளோவும் ஏன் சொல்றேன்ன எல்லாம் உங்க நன்மைக்கு தாங்க,அப்படி ரொம்ப முக்கியமான அழைப்பாக இருந்தால் சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டு பேசலாமே. அதிலும் சில பேர் எந்த ஒரு சிக்னலும் இல்லாம வண்டிய அப்படியே ஓரங்கட்டுவாங்க,பின்னாடி வருபவர்களை பற்றி யோசிப்பதே இல்லை. இவ்வளவு பிஸியாக இருப்பவர்கள் செல்போன் இல்லாத காலத்தில் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை நினைக்கவே முடியவில்லை.
இதயெல்லாம் பார்க்கும் பொது சூப்பர் ஸ்டாரோட பஞ்ச் டயலாக் தாங்க ஞாபகம் வருது
"கண்ணா அதிகமா  டி.வி பார்க்குற பொம்பளையும்
 அதிகமா செல்போன்ல பேசுற ஆம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல"
வர்ட்டா......!

Thursday, June 17, 2010

இறைவனின் பெயரால்..
நம்ம நாடு(அதாங்க இந்தியா)வளர்ந்த நாடா மாறியதற்கு அப்புறம் (எப்ப மாறுச்சு?) எல்லாருக்கும் கையில 5 விரல் இருக்குதோ இல்லையோ ஒரு செல்போன் இருக்கு. அதே மாதிரி அடுத்த கட்ட வளர்ச்சியா நம்ம நாட்டு விஞ்ஞானிகள் கணிக்கிறது எல்லாருக்கும் ஒரு வலைப்பூ(blog) இருக்கும் என்ற செய்திதான்.ஏன் நாமளும் நம்ம நாட்டோட வளர்ச்சில பங்கெடுத்துக்க கூடாதுன்னு குப்புற படுத்து யோசிச்சதன் விளைவு தான் இந்த வலைப்பூ.

சரி,வலைப்பூ தொடங்கியாச்சு ஏதாவது எழுதனுமே னு யோசிக்கும் போதுதான் தலையே வெடிச்சுடும் போலிருக்கு.என்ன பண்றது இவ்ளோ நாள் சும்மா இருந்தே பழக்கப்பட்ட மூளைய திடீர்னு வேலை பார்க்க சொன்னா அது என்ன பண்ணும் பாவம். சரி,கழுதை ஆரம்பிச்சுட்டோம் என்னத்தையாவது எழுதி தொலைவோம், மூளை இல்லன்னா என்ன அதான் மனசு இருக்கே மனசுக்கு எது சரின்னு படுதோ அதை எழுதுவோம்,என்ன சொல்றீங்க?

முதல் இரண்டு வார்த்தைய எழுதி முடிச்சவுடனே ஒரு சின்ன பயம். ஏன்னா எனக்கு தெரிஞ்ச முக்கியமான பதிவர்கள் எல்லாமே நாத்திகம் பேசுறவங்க,எங்க நம்ம எழுத்தை பார்த்துட்டு இவன் ஒரு கடவுள் நம்பிக்கை உள்ள முட்டாள்,இல்ல பார்ப்பனீயவாதி அப்படி இப்படி னு ஏதாவது சொல்லி பின்னுட்டததுல வந்து கும்மிட்டா என்ன பண்றது?(இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ளே பின்னுட்டமா?) ஆனா நாம தான் மனசு பேச்சை கேக்குரவனாச்சே அதான் எது நடந்தாலும் பரவாயில்ல னு எழுதிட்டேன்.

இனிமே என்ன நடந்தாலும் பரவாயில்லிங்க,மனசுக்கு எது சரின்னு படுதோ அதை தைரியமா எழுத போறேன்(எல்லாம் உங்க மேல உள்ள நம்பிக்கை தான்). தொடர்ந்து உங்கள் ஆதரவை நாடும் உங்கள் நண்பன் இனியவன்.

(குறிப்பு : இந்த பதிவிற்கு முதல் பின்னுட்டம் இடுவதின் முலமாக வரலாற்றில் இடம் பெற போகும் அந்த நபர் யாரென்று அறிய உங்களை போன்றே நானும் மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறேன்,அது நீங்களாகவும் இருக்கலாம்.)